நடிகை ஜெனிலியா அவரின் கணவரை அடித்து புரட்டி எடுப்பது போல நெட்டிசன்கள் எடிட் செய்து வெளியிட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கு விழா ஒன்றில் கன்னத்தை உரசி, கைகளில் ரித்தேஷ் முத்தம் கொடுப்பதை அருகில் சிரித்துக் கொண்டே ஜெனிலியா பார்க்கின்றார்.
இந்த வீடியோவை லேட்டஸ்ட்டாக எடிட் செய்து வீட்டுக்கு வந்த பிறகு என்ன ஆச்சுன்னு பாருங்க என காமெடியாக வெளியிட்டு இருக்கும் கும்மாங்குத்து வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram
சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் பார்த்த ஹாசினி போலவே இப்போதும் குறும்புத் தனமாக இருக்கிறார் நடிகை ஜெனிலியா.
பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ் முக்கை திருமணம் செய்து சினிமாவுக்கு முழுக்கு போட்டாலும், சமூக வலைதளங்கள் மூலம் இன்னமும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். அண்மையில் விஜய் பாடலுக்கு அவர் நடனமாடிய காணொளி வைரலாகி இருந்த நிலையில் தற்போது இந்த காணொளி வைரலாகி வருகின்றது.